ஜெயலலிதா கருத்துப்படி எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது– மாநிலத்தில் 2–வது தலைநகரமாக விளங்கக்கூடிய மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும்.
மதுரை,
முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது–
மாநிலத்தில் 2–வது தலைநகரமாக விளங்கக்கூடிய மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அனைத்து அம்சங்களும் மதுரையில் உள்ளன. இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தால் பெரும்பான்மையான மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இதற்கான கருத்துகள் வலுவாக உள்ளன. இதுபோல், மறைந்த முதல்– அமைச்சர் ஜெயலலிதாவும் இந்த கருத்தில் உறுதியாக இருந்தார். எனவே அவரது கருத்துப்படி எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.