கோவில்பட்டியில் சுந்தரலிங்கனார் பிறந்த நாள் விழா: தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை பெற்று தர ரஜினி தயாரா? சீமான் கேள்வி
தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை பெற்று தர ரஜினி தயாரா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவில்பட்டி,
தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை பெற்று தர ரஜினி தயாரா? என்று கோவில்பட்டியில் நடந்த சுந்தரலிங்கனார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுந்தரலிங்கனார் பிறந்தநாள்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில் மேல ரதவீதியில் மாவீரன் சுந்தரலிங்கனார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கூட்டத்திற்கு தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் வக்கீல் சிவகுமார் தலைமை தாங்கினார்.
வடக்கு மாவட்ட தலைவர் மாரியப்பன், மாவட்ட செயலாளர் பாண்டி, தொகுதி தலைவர் தங்க மாரியப்பன், மண்டல தலைவர் வெற்றி சீலன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புங்கன், தொகுதி செயலாளர் ராஜேஷ் கண்ணா, மாவட்ட பொருளாளர் ஜெயபாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வியனரசு, அமுதா நம்பி, வெற்றி குமரன், சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசும் போது கூறியதாவது;-
தண்ணீர் பஞ்சம்
தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது. கல் குவாரியில் தேங்கி கிடக்கும் தண்ணீரை பயன்படுத்தும் நிலைமை ஏற்பட்டு உள்ளது. அரசால் சுகாதாரமான குடிநீரை மக்களுக்கு வழங்க முடியவில்லை. அனைத்திற்கும் திட்டம் தீட்டும் அரசு, குடிநீர்- உணவு போன்றவைகளுக்கு எந்தவித திட்டமும் தீட்டவில்லை.
தமிழகத்தில் விவசாயம் அழிந்ததன் காரணமாக பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை போன்றவை வந்து விட்டன. மத்திய அரசு தமிழகத்தில் திட்டமிட்டு இந்தியை திணித்து வருகிறது.
ரஜினி தயாரா?
மாற்றத்தை விரும்பும் தமிழக மக்கள், ரஜினி பின்னால் செல்ல வேண்டும் என பிரசாரம் செய்யப்படுகிறது. அவர் பின்னால் போனால் அரசியல் செய்ய முடியாது. நடிக்க மட்டுமே முடியும்.
அவரால் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் பெற்றுத்தர முடியுமா?. அப்படி அவர் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வந்தால், நான் அரசியலில் இருந்தே விலகி விடுகிறேன்.
இவ்வாறு சீமான் பேசினார்.