துயர் துடைக்கும் சுழலும் தண்ணீர் கேன்கள்
தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பெண்கள் பல மைல் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலைமை பல மாநிலங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பெண்கள் பல மைல் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலைமை பல மாநிலங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் அருகிலுள்ள போர்கோன் கிராமத்தில் தண்ணீர் தேடி திரியும் பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது, உருளை வடிவ பிளாஸ்டிக் கேன்கள். ரோடு ரோலர் போல தரையில் உருட்டி செல்லும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த பிளாஸ்டிக் கேன்கள் பெண்களின் தண்ணீர் தேவையை மட்டுமின்றி குடங்களை நீண்ட தூரம் சுமக்கும் பாரத்தையும் இறக்கி வைத்திருக்கிறது. ஐந்தாறு முறை குடத்துடன் கிணற்றுக்கும், வீட்டுக்கும் நடையாய் நடக்க வேண்டியிருக்கும் நேரத்தையும் மிச்சப்படுத்துவதால் பெண்கள் மத்தியில் இந்த பிளாஸ்டிக் கேன்களுக்கு அமோக வரவேற்பு இருக்கிறது. இது பற்றி அந்த கிராமத்தை சேர்ந்த லட்சுமி பாய் சொல் கிறார்.
“எனது வீட்டில் மொத்தம் 6 பேர். வீட்டில் இருந்து ஐந்து மைல் தூரத்தில் இருக்கும் கிணற்றுக்கு சென்றுதான் தண்ணீர் எடுத்து வர வேண்டும். எனது வீட்டின் தண்ணீர் தேவைக்காக மட்டுமே தினமும் மூன்று முதல் நான்கு மணி நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும். அதற்குள் குடங்களில் சுமக்கும் தண்ணீரால் தலையும், இடுப்பும் கடுமையாக வலிக்க தொடங்கிவிடும். இப்போது அந்த கவலை இல்லை. இந்த பிளாஸ்டிக் கேன்களை சக்கரம் போல தரையில் உருட்டிக்கொண்டே சென்று சுலபமாக தண்ணீர் எடுத்து வர முடிகிறது” என்கிறார்.
இந்த பிளாஸ்டிக் கேன்கள் கடினமான நிலப்பரப்புகளிலும் தடையின்றி சுழன்று செல்லும் வகையில் பிரத்யேக கைப்பிடிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவுரங்காபாத், லாடூர், ஓஸ்மானாபாத், கார்ஜத் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் தொண்டு நிறுவனம் உதவியுடன் 1500-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கேன்கள் உபயோகத்தில் இருக்கின்றன. இவை வீட்டின் தண்ணீர் தேவைகளுக்கு மட்டுமின்றி கட்டுமானம் போன்ற பிற பணிகளுக்கும் கைகொடுக்கின்றன.
ஓஸ்மானாபாத்தை சேர்ந்த சுனந்தா கணவரால் கை விடப்பட்டவர். சொந்த காலில் நின்று முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் செயல்பட்டு சொந்தமாக வீடு கட்ட தீர்மானித்தார். ஆனால் தண்ணீர் பிரச்சினை கட்டுமான பணிக்கு தடையாக அமைந்தது. தற்போது பிளாஸ்டிக் கேன்கள் துணையுடன் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கட்டுமானத்திற்கு போதுமான தண்ணீரை உருட்டியே கொண்டு வந்து விடுகிறார். இவரால் தினமும் 500 லிட்டர் தண்ணீரை எளிதாக கொண்டு வந்துவிட முடிகிறது.