மண்டலவாடியில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை

மண்டலவாடியில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Update: 2017-06-10 22:30 GMT
திருப்பத்தூர்,

ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி லட்சுமிநகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 32), விவசாயி. இவரது மனைவி கற்பகசெல்வி. இவர்களுக்கு குணவர்மன் என்ற மகனும், சுஷ்மிதா என்ற மகளும் உள்ளனர். பிரகாஷ் தனக்கு சொந்தமான ½ ஏக்கர் நிலம், உறவினர் ஒருவரின் 1 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். அதற்காக அவர் கடன் வாங்கியிருந்தார். அந்த கடனை அவரால் அடைக்க முடியவில்லை. இதையடுத்து அவர் கூலிவேலைக்காக திருப்பூருக்கு சென்றார். அங்கும் அவருக்கு போதுமான வருமானம் கிடைக்கவில்லை.

இதையடுத்து மனவேதனையுடன் பிரகாஷ் ஊருக்கு திரும்பி வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அவர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்