மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த லாரி டிரைவர் பரிதாப சாவு
காரிமங்கலம் அருகே மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த லாரி டிரைவர் பரிதாப சாவு
காரிமங்கலம்,
ஊட்டி பசுவையா நகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மகன் பிரகாஷ் (வயது 19) லாரி டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த இன்னொரு டிரைவரான ராஜேஷ்கண்ணா (29) என்பவருடன் சரக்கு லாரியில் சென்னை சென்றார். பின்னர் அங்கிருந்து காலி அட்டைப்பெட்டிகளை ஏற்றிக்கொண்டு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் விபத்துக்குள்ளாகி நின்ற ஒரு வாகனத்தை பார்க்க மேம்பாலத்தில் லாரியை நிறுத்தினார்கள். லாரியில் இருந்து இறங்கி சுவர் அருகே சென்றபோது கால் இடறி பிரகாஷ் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் விழுந்ததை ராஜேஷ்கண்ணா கவனிக்கவில்லையாம். எனவே அந்த பகுதியில் பிரகாஷை தேடிய ராஜேஷ்கண்ணா பின்னர் அங்கிருந்து லாரியில் புறப்பட்டார். இதுதொடர்பாக பிரகாஷின் தந்தைக்கு ராஜேஷ்கண்ணா தகவல் கொடுத்தார். பின்னர் அவர் தெரிவித்தபடி மீண்டும் காரிமங்கலம் மேம்பாலப்பகுதிக்கு சென்றார். அங்கு பிரகாஷ் மேம்பாலத்தின் கீழே உள்ள ஒரு புதரில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார், பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்ததால் பிரகாஷ் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.