கடூர் அரசு கல்லூரியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு தேவேகவுடா திறந்துவைத்தார்

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் டவுன் அரசு கலைக்கல்லூரியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் புதியதாக கட்டப்பட்டுள்ளது.

Update: 2017-06-10 20:04 GMT

சிக்கமகளூரு,

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் டவுன் அரசு கலைக்கல்லூரியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் புதியதாக கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் திறப்பு விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்தார்.

நிகழ்ச்சியில் தேவேகவுடா பேசியதாவது:–

கல்வி என்பது மனித மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு மாணவ–மாணவிகளின் எதிர்கால மாற்றத்திற்கும் கல்வி அவசியம். கடூர் சட்டசபை தொகுதிக்கு எனது எம்.பி. நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளேன். கடூர் தொகுதியில் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். இதனால் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனில் தத்தா எம்.எல்.ஏ. முக்கியத்துவம் கொடுத்து இந்த பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்து வருகிறார். நானும் பல்வேறு சோதனைகளை கடந்து மக்களுக்கு தொண்டாற்றி வருகிறேன். இது பெருமையாக இருக்கிறது. கடூர் தொகுதியை மேலும் வளர்ச்சி அடைய வைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்