அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) அணி சார்பில் கோவையில் 25–ந் தேதி செயல்வீரர்கள் கூட்டம்

அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) அணி சார்பில் கோவையில் 25–ந் தேதி செயல்வீரர்கள் கூட்டம் முன்னாள் முதல் – அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

Update: 2017-06-10 22:15 GMT

கிணத்துக்கடவு

அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா அணி) சார்பில் கோவையில் 25–ந் தேதி செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் முன்னாள் முதல்– அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசுகிறார்.

செயல்வீரர்கள் கூட்டம்

அ.தி.மு.க. (புரட்சி தலைவிஅம்மா அணி) சார்பில் கோவை கொடிசியா அரங்கில் வருகிற 25–ந் தேதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக கோவை புறநகர் அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) ஆலோசனைகூட்டம் கிணத்துக்கடவில் நடைபெற்றது.

இதற்கு அவை தலைவர் வெங்கடாச்சலம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் தாமோதரன், எம்.எல்.ஏ.க்கள் சின்னராஜ், அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.பி. பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கோவை கொடிசியாவில் 25–ந் தேதி நடக்கும் செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்கிறார். எனவே இந்த கூட்டத்தில் கோவை புறநகர் பகுதியில் இருந்து 400–க்கும் மேற்பட்ட வாகனங்களில் கலந்து கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து முன்னாள் எம்.பி. பழனிச்சாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

இணைப்பு நாடகம்

கோவை கொடிசியாவில் வருகிற 25–ந் தேதி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் செயல்வீரர்கள் கூட்டம் தமிழகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும். எதிர் அணியை சார்ந்தவர்கள் ஏதோ இணைப்பு என்று நாடகத்தை நடத்தி கொண்டுள்ளனர். எங்களோடு யார் வந்து சேர்வது என்றாலும் தகுதி தராதரத்தை பார்த்து நாங்கள் எங்களோடு சேர்த்து கொள்வோம். நாங்கள் சென்று இணைய வேண்டிய அளவிக்கு இல்லை.

95 சதவீதத்திற்கு மேலே இருக்கிற அடிப்படை உறுப்பினர்கள் எங்களுடன் இருக்கிறார்கள். சுமார் 5 லட்சம் பிரமான பத்திரங்களை தேர்தல் ஆணையத்தின் முன்பு சமர்பிக்க இருக்கிறோம். உறுப்பினர் அட்டையோடு 1 கோடி தொண்டர்கள் எங்களுக்கு ஆதரவை வழங்கி உள்ளனர்.

சம்பந்தம் இல்லை

கோவையில் எங்களின் கூட்டம் நடந்து முடியும் போது உண்மையாண அ.தி.மு.க. நாங்கள்தான் என்ற அறிவிப்பு தேர்தல் ஆணையத்திடம் இருந்து வரும். ஜெயலலிதாவின் ஆட்சி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழகத்தில் அமையும். 60 நாள் கெடு மற்றும் அரசு கவிழ்கிறது என்பது தினகரனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இருக்கும் பிரச்சனை. எங்களுக்கும், அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விரைவில் ஆட்சி மாற்றம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஏற்படும்

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் சண்முகம், மணிமாறன், மயில்சாமி, பழனிச்சாமி, செந்தில்குமார், ராஜமாணிக்கம், செல்வி பத்மினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்