அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மூன்றாம் நிலை செயல் அலுவலர் பதவிக்கான எழுத்து தேர்வு

திருச்சியில் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட மூன்றாம் நிலை செயல் அலுவலர் பதவிக்கான எழுத்து தேர்வில் கலந்து கொண்டு 1,438 பேர் தேர்வு எழுதினர். 1,456 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Update: 2017-06-10 23:00 GMT

திருச்சி,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மூன்றாம் நிலை செயல் அலுவலர் பதவிக்கான எழுத்து தேர்வுகள் திருச்சியில் நேற்று 6 மையங்களில் நடந்தது. திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற எழுத்து தேர்வினை கலெக்டர் ராஜாமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டத்தில் இந்த தேர்வினை எழுத 2,894 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு இருந்தது. இதில் 1,438 பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள். 1456 பேர் தேர்வு எழுத வரவில்லை. மொத்த விண்ணப்ப தாரர்களில் தேர்வு எழுதியவர்களை விட எழுத வராதவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தேர்வுகள் 6 மையங்களிலும் காலை 10 மணி முதல் 1 மணி வரையும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெற்றது. தேர்வு பணிகளுக்கென 10 முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இப்போட்டித் தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ள 3 நடமாடும் குழு அமைக்கப்பட்டிருந்தது.

அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெற்றதை வீடியோ கருவி மூலம் பதிவு செய்யப்பட்டது. அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.

மேலும் செய்திகள்