ஸ்ரீவைகுண்டம் அருகே மணல் கடத்திய 6 பேர் கைது 3 லாரிகள்– கார் பறிமுதல்

ஸ்ரீவைகுண்டம் அருகே மணல் கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்து, 3 லாரிகள்– காரை பறிமுதல் செய்தனர்.

Update: 2017-06-10 20:00 GMT

ஸ்ரீவைகுண்டம்,

ஸ்ரீவைகுண்டம் அருகே மணல் கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்து, 3 லாரிகள்– காரை பறிமுதல் செய்தனர்.

மணல் கடத்தல்

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மணக்கரை அக்ரஹாரம் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள நிலத்தை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். அந்த நிலத்தை சிலர் குத்தகைக்கு வாங்கி, அதில் இருந்த ஆற்று மணலை கடத்தி செல்வதாக, முறப்பநாடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர்கள் வீரபாகு, ரெனிஸ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது மணக்கரை தாமிரபரணி ஆற்றுப்படுகையில் இருந்து ஆற்று மணல் அள்ளி சென்ற 3 லாரிகள் மற்றும் ஒரு காரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

6 பேர் கைது

இதுதொடர்பாக ஆறுமுகநேரி பேயன்விளையைச் சேர்ந்த தங்கராஜ் மகன் விக்னேஷ் (வயது 27), ராஜூ மகன் முகேஷ்குமார் (27), சின்ன நட்டாத்தி கிழக்கு தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் முத்துகிருஷ்ணன் (22), கிளாக்குளம் கீழ தெருவைச் சேர்ந்த கணபதி ராஜூ (47), மீனாட்சிபட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் (44), பத்மநாபமங்கலத்தைச் சேர்ந்த வெள்ளப்பாண்டி (50) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 லாரிகள், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 6 பேரையும் போலீசார் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்