சனியின் துணைக் கோளில் வேற்றுக்கிரகவாசிகள்?
சூரியக் குடும்பத்தின் பெரும் கோள்களில் ஒன்றான சனியில் வேற்றுக்கிரகவாசிகள் வசிப்பதற்கான சூழ்நிலை இருப்பதாக அமெரிக்காவின் ‘நாசா’ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தகவலை நாசா விஞ்ஞானிகள் தற்போது உறுதியாகக் கூறவில்லை என்றாலும், சனியின் துணைக் கோள் ஒன்றில் அதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம் என்று கூறியுள்ளனர்.
ஆனால் இந்தத் தகவல், குறிப்பிட்ட துணைக் கோள் குறித்த அடுத்தகட்ட ஆய்வில் உறுதிப்படுத்தப்படும் எனவும் ‘நாசா’ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சனியின் முக்கியத் துணைக்கோளான இன்செலடசில் மட்டுமே பூமியைப் போன்ற தட்பவெட்பமும், உயிர் வாழத் தகுந்த சூழலும் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதுதொடர்பாக, ‘நாசா’வின் காசினி விண்கலம் தொடர்ந்து 13 ஆண்டு கள் மேற்கொண்ட ஆய்வுகளின் பலனாகத் தற்போதைய உண்மை தெரிய வந்துள்ளது. இதுவரையான ஆய்வுகள் அனைத்தும் சீரான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்றால், இன்செலடசில் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உறுதி என ஆய்வாளர் ஜெப்ரி சீவால்டு தெரிவித்துள்ளார்.
காசினி விண்கலம்தான் கடந்த 2005-ம் ஆண்டு சனியின் துணைக்கோளான இன்செலடசில் பனிப்படலம் இருக்கும் உண்மையை முதன் முதலில் வெளிக்கொண்டு வந்தது.
இதையடுத்த 10 ஆண்டுகளில், இன்செலடசில் 30 முதல் 40 கி.மீ. பரப்பளவு கொண்ட பெருங்கடல் ஒன்று உறைந்து போயிருப்பதும் தெரியவந்தது.
சனி மற்றும் வியாழன் கிரகங்களின் பல்வேறு துணைக்கோள்களில் கடல்கள் உறைந்து போயிருப்பது விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது என்றாலும் இன்செலடசில் மட்டும் உயிர் வாழ்வதற்கான சூழல் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.