வேலூர் அருகே டிரைவரை வெட்டி லாரியை கடத்த முயற்சி பணம், செல்போனை பறித்துக்கொண்டு 4 பேர் கும்பல் தப்பி ஓட்டம்
வேலூர் அருகே 4 பேர் கும்பல் டிரைவரை வெட்டிவிட்டு லாரியை கடத்த முயன்றனர். கூச்சல் போட்டதால் பணம், செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
வேலூர்,
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி மேலபொய்கை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 44), லாரி டிரைவர். இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள டி.வி.எஸ். நிறுவனத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு கன்டெய்னர் லாரியில் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூரை அடுத்த மேல்மொணவூர் என்ற இடத்தில் நள்ளிரவு 12 மணியளவில் வந்தபோது டிரைவருக்கு தூக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர் மேல்மொணவூர் பஸ் நிறுத்தம் அருகே லாரியை நிறுத்திவிட்டு தூங்கினார்.
லாரியை கடத்த முயற்சி
நள்ளிரவு 1 மணி அளவில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல், லாரியில் ஏறி தூங்கிக்கொண்டிருந்த மாரியப்பனை தட்டி எழுப்பியது. தூக்கத்தில் இருந்து எழுந்த அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி லாரியை கடத்த முயற்சி செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் மாரியப்பன் கூச்சலிட்டார்.
இதில் ஆத்திரமடைந்த கும்பல், கையில் இருந்த கத்தியால் மாரியப்பனை வெட்டியது. இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து டிரைவர் மாரியப்பனிடம் இருந்த ரூ.4 ஆயிரம், ஏ.டி.எம். கார்டு, செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு மர்ம கும்பல் தப்பி ஓடியது. படுகாயமடைந்த மாரியப்பன், 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை வெட்டி லாரியை கடத்த முயன்ற 4 பேர் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.