ஆக்கிரமிப்பின் பிடியில் தாராபுரம் பஸ் நிலையம்
ஆக்கிரமிப்பின் பிடியில் தாராபுரம் பஸ் நிலையம் பயணிகள் கடும் அவதி;
தாராபுரம் பஸ் நிலையத்திற்கு நாளொன்றுக்கு 800-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதில் தொலைதூர பஸ்களின் எண்ணிக்கை தான் மிகவும் அதிகம். உள்ளூர் அரசு போக்குவரத்து கிளை அலுவலகத்தின் மூலம் 31 டவுன் பஸ்களும், 45 புறநகர் பஸ்களும் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
வசதிகள் இல்லை
தாராபுரம் பஸ்நிலையத்துக்கு தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள். ஆனால் இந்த பஸ்நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. மேலும் இருக்கும் ஒரு சில வசதிகளையும் நகராட்சி நிர்வாகம் பராமரிப்பது இல்லை. இதனால் பல்வேறு வகையில் பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
அனைத்து பஸ்நிலையங்களிலும் பொது கழிவறை அமைக்கப்பட்டு, ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, சுகாதாரத்துடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பஸ்நிலையத்தில் பொது கழிவறையை சுத்தமாகவும் சுகாதாரத்தோடும் பராமரிக்க ஊழியர்கள் நியமிக்கப்படாததால், கழிவறைக்குள் செல்ல முடியாத அளவிற்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுவிட்டது. இதனால் கழிவறையை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவைத்தனர். ஆனால், நகராட்சி நிர்வாகம் கழிவறைக்கே பூட்டுப்போட்டு யாரும் பயன்படுத்த முடியாதபடி செய்து விட்டது. இதனால் பஸ்நிலையத்திற்கு வரும் பயணிகள் குறிப்பாக பெண்கள் அவசரத்துக்கு கழிவறைக்கு செல்லமுடியாமல் மிகுந்த அவதிப்படுகிறார்கள்.
நடைபாதை ஆக்கிரமிப்பு
இது ஒரு புறம் இருக்க பஸ்நிலையத்தில் உள்ள கடைக்காரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடையின் முன்பு, நடைபாதையில் சுமார் 5 அடிக்கு ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளனர். இதுதவிர பஸ் நிலையத்திலிருந்து பக்கவாட்டில் பயணிகள் வெளியேறும் இடத்தில், நடைபாதையில் பழங்கள் விற்கும் கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பஸ் நிலையத்தில் இருந்த பொது நடைபாதை காணாமல் போய்விட்டது.
இது தவிர கடைக்காரர்களும், பஸ்நிலையத்திற்கு வந்து செல்லும் பொதுமக்களும் தங்களது மோட்டார் சைக்கிள்களை நடைபாதையின் குறுக்கே நிறுத்தி வைத்துவிடுகிறார்கள். இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல முடிவதில்லை. பஸ் நிலையத்தில் குறுக்கும் நெடுக்குமாக சென்று பஸ் ஏறவேண்டிய நிலை இருப்பதால், அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.
குடிநீர் வசதி கிடையாது
பயணிகளின் அடிப்படை தேவைகளில் குடிநீர் மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. பஸ் நிலையத்தில் எங்குதேடினாலும் குடிநீர் கிடைக் காது. சுத்தமான குடிநீர் வழங்குவதைப்போல ஒரு தோற்றத்தை நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி வைத்திருக்கிறதே தவிர, இந்த பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி கிடையாது.
குடிநீர் வழங்காத குழாய்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. பயணிகளின் நலன் கருதி பஸ்நிலையத்தில் பாதுகாப்பான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி தரவேண்டும் என்பது பயணிகளின் நீண்ட கால கோரிக்கைகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
நிழற்குடை
இந்த வழியாக தென்மாவட்டங்களுக்கு அதிகப்படியான பஸ்கள் சென்று வருகின்றன. அனைத்து தொலைதூரப் பஸ்களும் தாராபுரம் பஸ் நிலையத்திற்கு வந்துசெல்கின் றன. இங்கிருந்து தென் மாவட்டங் களுக்கு நேரடியாக செல்ல பஸ் வசதி இல்லாததால், தொலைதூரப் பஸ்களுக்காக தினந்தோறும் பஸ் நிலையத்தில் ஏராளமான பயணிகள் காத்திருக்கிறார்கள். இந்த பயணிகளுக்கு தனியாக நிழற்குடை எதுவும் அமைக்கப்படவில்லை.
இதனால் குழந்தைகளோடும் முதியவர்களோடும் பயணிகள் வெயிலிலும் மழையிலும் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள் ளது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக பஸ்நிலையத்தில் தனியாக நிழற்குடை அமைத்துக் தரவேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.