ஓசூரில் துக்கலம்மா கோவில் சீரமைப்பு பணி நிறைவு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஓசூர் துக்கலம்மா கோவில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நடந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.;
ஓசூர்,
ஓசூரில் ராமநாயக்கன் ஏரியில் மிகவும் பழமையான துக்கலம்மா தேவி என்ற அம்மன் கோவில் உள்ளது. துக்கலம்மாவிற்கு பூஜைகள் செய்து, ஆடு வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினால் மழை பொழியும் என்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.அதன்படி கடந்த மாதம் ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஏ.மனோகரன் தலைமையில் இந்த கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் ஆடு வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.
சிறப்பு பூஜைகள்
இந்த நிலையில் சிறிய அளவில் உள்ள இக்கோவில் சீரமைக்கப்பட்டு, கோவிலை சுற்றிலும் மற்றும் தரையிலும் கற்கள் பதிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தன. இந்த பணிகளை முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஏ.மனோகரன் பார்வையிட்டார். தொடர்ந்து அவர் தலைமையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், கல்யாண சூடேஸ்வரர் கமிட்டி உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஓசூர் நகர ஐ.என்.டி.யு.சி தலைவர் முருகன், மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் முத்தப்பா, தமிழ்ச்சங்க தலைவர் குருசாமி, செயற்குழு உறுப்பினர்கள் பால் முனியப்பா, சின்னப்பா, மற்றும் தேர்பேட்டை பாலகிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தொடர்ந்து மழை வளம் பெருக வேண்டும் என்று அம்மனை வழிபட்டனர்.