போலி டாக்டர் கைது மருந்துக்கடைக்கு ‘சீல்’ வைப்பு

கிருஷ்ணகிரி அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். அவரது மருந்துக்கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2017-06-09 22:10 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரியமோட்டூரைச் சேர்ந்தவர் குப்புராஜ் (வயது 42). இவர் பி.பார்ம் படித்து விட்டு குருபரப்பள்ளி அருகில் ராமாபுரம் என்ற இடத்தில் மருந்துக்கடை வைத்துள்ளார். அவர் தனது கடையின் ஒரு இடத்தில் அந்த பகுதி மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவ பணிகள் இணை இயக்குனர் அசோக்குமாருக்கு புகார் வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அவர் ராமாபுரம் பகுதியில் உள்ள குப்புராஜூக்கு சொந்தமான மருந்துக்கடைக்கு சென்று விசாரணை நடத்தினார். அதில் அங்குள்ள பொதுமக்களுக்கு எம்.பி.பி.எஸ். படிக்காமல் ஆங்கில மருத்துவம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது

இதையடுத்து மருத்துவ பணிகள்  இணை இயக்குனர் அசோக்குமார் குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலி டாக்டரான குப்புராஜை கைது செய்தனர். மேலும் அவரது கடையில் ஆங்கில மருத்துவத்திற்கு பயன்படுத்தும் ஊசி, மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்து மருந்துக்கடைக்கு ‘சீல்’ வைத்தனர்.

மேலும் செய்திகள்