3 வழித்தடங்களில் ஏ.சி. பஸ் சேவை எம்.எம்.ஆர்.டி.ஏ. அறிமுகம் செய்கிறது

3 வழித்தடங்களில் ஏ.சி. பஸ் சேவையை எம்.எம்.ஆர்.டி.ஏ. அறிமுகம் செய்கிறது.

Update: 2017-06-09 21:59 GMT

மும்பை,

3 வழித்தடங்களில் ஏ.சி. பஸ் சேவையை எம்.எம்.ஆர்.டி.ஏ. அறிமுகம் செய்கிறது.

மீண்டும் ஏ.சி. பஸ்

மும்பை மாநகராட்சியின் கீழ் செயல்படும் பெஸ்ட் குழுமம் சார்பில் நகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி அண்மையில் பெஸ்ட் குழுமம் ஏ.சி. பஸ் சேவையை நிறுத்தியது. இந்தநிலையில், மும்பையில் இயக்குவதற்கு மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (எம்.எம்.ஆர்.டி.ஏ.) 25 அதிநவீன ஹைபேர்டு ரக ஏ.சி. பஸ்களை அறிமுகம் செய்கிறது.

அதே நேரத்தில் இந்த பஸ்களை பெஸ்ட் குழுமம் மும்பையில் 3 வழித்தடங்களில் இயக்க உள்ளது. இந்த பஸ்கள் பேட்டரியில் இயங்க கூடியதாகும். இந்த பஸ்கள் பாந்திரா, குர்லா மற்றும் சயானில் இருந்து பி.கே.சி.க்கு இயக்கப்பட உள்ளன. ஏ.சி. பஸ்களின் கட்டணம் குறைந்தபட்சம் ரூ.15–யில் இருந்து ரூ.25 வரை நிர்ணயம் செய்யப்படும்.

கருத்து கேட்கப்படும்

ஏ.சி. பஸ் சேவை அடுத்த மாதம் (ஜூலை) முதல் தொடங்கும் என கூறப்படுகிறது. இது குறித்து பெஸ்ட் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்த வழித்தடங்களில் எங்கு எல்லாம் பஸ் நிறுத்தப்படும் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இதுபற்றி பயணிகளிடம் கருத்துக்கள் கேட்கப்படும். பயணிகளிடம் கருத்துக்கள் கேட்க புதிதாக செல்போன் செயலி உருவாக்கப்படும்’ என்றார்.

மேலும் செய்திகள்