குடும்ப பிரச்சினை காரணமாக ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து தற்கொலை.
சென்னை,
சென்னை மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் விவேகானந்தர் இல்லம் அருகே ஆட்டோவில் ஒரு நபர் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மெரினா போலீசார் விரைந்து சென்று இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்து கிடந்தவர் சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிவகுமார்(வயது 40) என்பதும், குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.