மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டம் விவசாயிகள்-தொழிலாளர்கள் பங்கேற்பு
மத்தியஅரசின் தடைக்கு எதிராக தஞ்சையில் நடந்த மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டத்தில் விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் பங்கேற்றனர்.
தஞ்சாவூர்,
இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்தியஅரசு தடை விதித்துள்ளது. இது உழைக்கும் மக்கள், முஸ்லிம்கள், விவசாயிகள் மீது ஏவப்பட்ட அடக்குமுறையாகும். எனவே மத்தியஅரசை கண்டித்தும், இந்த தடையை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்தியஅரசு விதித்த இந்த தடையை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்க கோரியும் மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் நேற்று காலை நடந்தது.
இதற்கு மாவட்ட செயலாளர்கள் பக்கிரிசாமி, சாமி.நடராஜன், ஜெயபால் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர்கள் கோவிந்தராஜூ, காமராஜ், வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் நீலமேகம், மாவட்ட செயலாளர் மனோகரன், விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சங்கர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். பின்னர் போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மாட்டு இறைச்சியுடன் கூடிய பிரியாணி வழங்கப்பட்டது. அவற்றை அனைவரும் சாப்பிட்டனர்.
அனுமதி மறுப்பு
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் செந்தில்குமார், இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட நிர்வாகிகள் அன்பு, பேர்நீதிஆழ்வார், விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் நம்பிராஜன், ராம், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் அபிமன்னன், மருதமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால் அதையும் மீறி போராட்டத்தை நடத்துவோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் போராட்டத்திற்கு எந்த தடையும் ஏற்படுத்தாமல் போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.