பஸ் கவிழ்ந்து 35 பயணிகள் காயம்

தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து திருச்சி மாவட்டம் அரசங்குடி வழியாக திருவெறும்பூருக்கு ஒரு தனியார் பஸ் 50 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது.

Update: 2017-06-09 22:45 GMT
திருவெறும்பூர்,

நடராசபுரம் எல்லை அருகே ஒரு வளைவில் பஸ்சை திருப்ப முயன்ற போது டிரைவரின் கவன குறைவால் பஸ் அங்கிருந்த பள்ளத்தில் இறங்கி நிலை தடுமாறி வயலுக்குள் கவிழ்ந்தது.

இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் போலீசார் அங்கு சென்று பஸ்சுக்குள் இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 35 பேர் காயமடைந்தனர். இதில் 19 பேர் திருச்சி அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்