கரூர் அரசு கலைக்கல்லூரியில் கலந்தாய்வு: பி.பி.ஏ., பி.காம். பாடப்பிரிவுகளில் சேர மாணவ-மாணவிகள் குவிந்தனர்
கரூர் அரசு கலைக்கல்லூரி கலந்தாய்வில் பி.பி.ஏ., பி.காம். பாடப்பிரிவுகளில் சேர மாணவ-மாணவிகள் குவிந்தனர்.
கரூர்,
கரூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 2-ந்தேதி தொடங்கியது. கடந்த 5-ந்தேதி பி.ஏ. தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுகளில் சேருவதற்கான கலந்தாய்வும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு கடந்த 7-ந்தேதியும் நடந்தது.
தொடர்ந்து கலை மற்றும் தொழில்பிரிவு பாடங்களான பி.பி.ஏ., பி.காம்., பி.காம் சி.ஏ., பொருளாதாரம், வரலாறு ஆங்கில வழி மற்றும் தமிழ் வழியிலும், பி.பி.எம். உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் மொத்தம் 480 இடங்களுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக ஏராளமான மாணவ-மாணவிகள் குவிந்தனர்.
சான்றிதழ்கள் சரிபார்ப்பு
மதிப்பெண்கள் தரவரிசைப்படி மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு நடந்தது. கலந்தாய்வில் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்தவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளிட்ட சான்றிதழ்களை பேராசிரியர்கள் குழுவினர் சரிபார்த்தனர். மாணவ-மாணவிகளுக்கு சேர்க்கை ஆணையை கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் வழங்கினார். காலை 10 மணிக்கு தொடங்கிய கலந்தாய்வு மாலை 5 மணி வரை நடந்தது. இதில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன.