பஞ்சாபிகேம்ப் மக்களுக்கு அங்கேயே டிரான்சிட்கேம்ப் குடியிருப்பு முதல்–மந்திரி உறுதி

சயான்கோலிவாடா பஞ்சாபிகேம்பில் உள்ள 25 கட்டிடங்களில் சீக்கிய மக்கள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

Update: 2017-06-08 23:15 GMT

மும்பை,

சயான்கோலிவாடா பஞ்சாபிகேம்பில் உள்ள 25 கட்டிடங்களில் சீக்கிய மக்கள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். அந்த தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கேப்டன் தமிழ்ச்செல்வன் முயற்சியின் பேரில், இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்டி வீடுகள் வழங்க மாநில அரசு முடிவு செய்து உள்ளது.

இந்த நிலையில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடியிருப்பதற்கு தகுதியற்ற அந்த கட்டிடங்களை இடித்து தள்ள மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி அண்மையில் அந்த கட்டிடங்களின் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை துண்டிக்க மாநகராட்சி அதிகாரிகள் வந்த போது, குடியிருப்புவாசிகளுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் உண்டானது.

இந்த நிலையில், நேற்று கிங்சர்க்கிளில் நடந்த கட்சி விழாவில் கலந்து கொள்ள வந்த முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம், பஞ்சாபி கேம்ப் குடியிருப்புவாசிகளுக்கு அங்கேயே டிரான்சிட் குடியிருப்புகள் கட்டி குடியமர்த்தி விட்டு கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்களை கட்ட வேண்டும் என்று கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு கொடுத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட முதல்–மந்திரி அங்கேயே பஞ்சாபி கேம்ப் மக்களுக்கு டிரான்சிட் கேம்ப் குடியிருப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

மேலும் செய்திகள்