சென்டாக் முறைகேடை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
பாகூர் தொகுதி பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாதா ஆலயம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாகூர்,
மருத்துவ மேற்படிப்பில் சென்டாக் மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடை கண்டித்து பாகூர் தொகுதி பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாதா ஆலயம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொகுதி தலைவர் கோபால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தங்க தமிழரசன், அனந்தராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் தங்க.விக்ரமன் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தில் காணப்படும் சுகாதார சீர்கேட்டை சரிசெய்யவேண்டும், குடியிருப்பு பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகளை மூடவேண்டும், மருத்துவ பட்ட மேற்படிப்பில் சென்டாக் மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட செயலாளர் கணேசன், பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் துரை.சேனாதிபதி, விவசாய அணி பொதுச் செயலாளர் ராஜவேல், ஆதிராவிடர் அணி தலைவர் ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் சக்திபாலன், லட்சுமிகாந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.