பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்
ராமநாதபுரத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை மாவட்ட கலெக்டர் நடராஜன் வழங்கினார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கோடை விடுமுறை நிறைவடைந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தமிழ்நாடு அரசு மாணவ-மாணவிகளுக்காக செயல்படுத்தி வரும் விலையில்லா பாடப்புத்தகம், விலையில்லா சீருடை வழங்கும் திட்டங்களின்கீழ் ராமநாதபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, அரசு மீள்திறன் பயிற்சி, மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சார்ந்த மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை மாவட்ட கலெக்டர் நடராஜன் வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:- மாவட்டத்தில் 67 அரசு மேல்நிலைப்பள்ளிகளும், 33 அரசு உதவி பெறும் மேல் நிலைப்பள்ளிகளும், 64 அரசு உயர்நிலைப்பள்ளிகளும், 21 அரசு உதவி பெறும் உயர் நிலைப்பள்ளிகளும், 154 அரசு நடுநிலைப்பள்ளிகளும், 29 அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளும், 758 அரசு தொடக்கப்பள்ளிகளும், 161 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.
பாடப்புத்தகம்- சீருடை
நடப்பு கல்வியாண்டில் மாவட்டத்தில் 89,000 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களும், 37,000 மணவர்களுக்கு விலையில்லா சீருடைகளும் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன், ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) முத்துசாமி, மாவட்ட கல்வி அலுவலர் சந்திரசேகரன், மீள்திறன் பயிற்சி பள்ளி ஒருங்கிணைப்பாளர் நவநீதகிருஷ்ணன், தலைமை ஆசிரியர்கள் விசுவாசம், எஸ்தர் ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.