வறட்சியால் முந்திரி சாகுபடி பாதிப்பு: நிவாரணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

வறட்சியால் முந்திரி சாகுபடி பாதிப்பு: நிவாரணம் வழங்க கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2017-06-08 22:45 GMT
செந்துறை.

அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய அலுவலகம் முன்பு ஏரி ஆற்று பாசன விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். செந்துறை ஒன்றிய தலைவர் அருணாச்சலம் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை மாநில தலைவர் விஸ்வநாதன் தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக வறட்சியால் முந்திரி சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே முந்திரி சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். நவீன ஒட்டு ரக முந்திரி கன்றுகளை இலவசமாக வழங்க வேண்டும். செந்துறையில் முந்திரி ஆராய்ச்சி நிலையம், முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்