குடிபோதையில் தகராறு: போலீசில் பணியாற்றி நீக்கப்பட்டவர் கைது

கரூர் அருகே மண்மங்கலம் பகுதியில் ரெங்கநாதன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் இளவரசன்(வயது34). இவர் கரூர் மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிந்து வந்தார். பல்வேறு காரணங்களால் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2017-06-08 22:15 GMT

கரூர்,

கரூர் அருகே மண்மங்கலம் பகுதியில் ரெங்கநாதன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் இளவரசன்(வயது34). இவர் கரூர் மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிந்து வந்தார். பல்வேறு காரணங்களால் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த 6–ந் தேதி அவர், அன்னைமடம் பஸ் நிறுத்தம் அருகே குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தார். அங்கிருந்த பெண்களை தகாத வார்த்தையால் திட்டினார். மேலும் பஸ் நிறுத்த மேற்கூரையை சேதப்படுத்தினார். இதனை தட்டிக்கேட்ட அந்த பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (57) என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பாக வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளவரசனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்