மங்களூரு அருகே, உடல்நலக்குறைவால் பரிதாபம் என்.ஐ.டி. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை கேரளாவை சேர்ந்தவர்
மங்களூரு அருகே, உடல்நலக்குறைவால் கேரளாவை சேர்ந்த என்.ஐ.டி. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மங்களூரு,

இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
உடல்நலக்குறைவு
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் மனுகுட்டன்(வயது 25). இவர் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே சூரத்கல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சீனிவாசநகர் பகுதியில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய தொழில்நுட்ப கல்லூரியில்(என்.ஐ.டி.) 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
மேலும் கல்லூரிக்கு சென்று வருவதற்கு வசதியாக தடம்பைல் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மனுகுட்டன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் பல மருத்துவமனைகளில் சிசிச்சையும் பெற்றார். ஆனாலும் அவருக்கு உடல்நலம் சரியாகவில்லை என்று தெரிகிறது. இதனால் மனுகுட்டன் மனம் உடைந்து காணப்பட்டார்.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மனுகுட்டனுடன் படிக்கும் அவரது நண்பரான பசவனகவுடா, மனுகுட்டனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் செல்போனை எடுத்து மனுகுட்டன் பேசவில்லை. இதனால் மனுகுட்டனின் வீட்டிற்கு பசவனகவுடா சென்றார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
இதனால் கதவை பசவன கவுடா தட்டினார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் கதவு திறக்கவில்லை. இதனால் ஜன்னல் வழியாக பசவனகவுடா வீட்டிற்குள் பார்த்தார். அப்போது மனுகுட்டன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பசவனகவுடா சூரத்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மனுகுட்டனின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது உடல்நலக்குறைவால் மனுகுட்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
விசாரணை
இதையடுத்து அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மங்களூரு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக சூரத்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
என்.ஐ.டி. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.