திருட்டு கார்களில் வந்த வழிப்பறிக்காரர்கள் 8 பேர் கைது வாகனங்கள் பறிமுதல்

வாடிப்பட்டி அருகே திருட்டு கார்களுடன் வழிப்பறிக்கு காத்திருந்த 8 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 கார்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2017-06-08 23:00 GMT

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா, சப்–இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் ரோந்து சென்றனர். நேற்று அதிகாலை 2 மணிக்கு வாடிப்பட்டி பாலதண்டாயுதபாணி கோவில் பிரிவு சாலையில் 2 கார்கள், ஒரு மோட்டார்சைக்கிள் நின்றன. அந்த கார்களில் 8பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை செய்த போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினர். இதனால் போலீசாருக்கு சந்தேகம் வந்ததால், காரை சோதனை செய்தனர்.

அப்போது காருக்குள் கம்பு, கயிறு, கம்பி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து கார்களை திருடிக்கொண்டு வந்த போது, பெட்ரோல் காலியாகிவிட்டதால், அந்த வழியாக வருபவர்களிடம் வழிப்பறி செய்ய காத்திருந்ததாக கூறினர்.

8 பேர் கைது

மேலும் அவர்கள் வாடிப்பட்டி மேட்டு நீரேத்தானை சேர்ந்த ஜெயபிரகாஷ், கர்நாடகாவை சேர்ந்த மகேஷ், விஷ்ணுகுமார், கோவையை சேர்ந்த கணேசன், தியானேஷ்வரன், மேட்டுபாளைத்தை சேர்ந்த முபாரக்அலி, கேரளாவை சேர்ந்த சகாயத் அகமது, சாதிக் அகமது என்பது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து 8 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, திருடி வந்த 2 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும் செய்திகள்