திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம்
திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமியையொட்டி பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை,
பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் அண்ணாமலையார் மலையை சுற்றி கிரிவலம் வருவார்கள்.
அதன்படி, இந்த மாதத்துக்கான (வைகாசி) பவுர்ணமி நேற்று மாலை 5.35 மணிக்கு தொடங்கி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.34 மணிக்கு முடிகிறது. பவுர்ணமியையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் நின்றனர்.
பவுர்ணமியையொட்டி காலையில் அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலை அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். வெளிமாநில பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை முதல் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். மாலை 4 மணி முதல் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவு 7 மணியளவில் கிரிவலப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
விடிய, விடிய கிரிவலம்
அதைத்தொடர்ந்து நேற்று இரவு முழுவதும் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர். கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே நீர், மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. பக்தர்களின் வசதிக்காக பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
கிரிவலம் சென்ற பக்தர்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல இரவு வேளையில் ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் குவிந்ததால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பவுர்ணமியையொட்டி கிரிவலப்பாதை உள்பட நகரின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.