செம்மண் குவாரியை மூட வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் வல்லம்புதூர் பகுதியில் முதலைமுத்து வாரி நீர்தேக்கம் உள்ளது. இங்கு தேங்கும் தண்ணீரை நம்பியே வல்லம், சென்னம்பட்டி, நாட்டாணி உள்ளிட்ட 5 கிராமமக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். நீர்தேக்கத்திற்கு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுகா பகுதியில் இருந்து தண்ணீர் வரும். ஆனால் தண்ணீர் வரக்கூடிய பாதையில் செம்மண் குவாரிகள் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சை-புதுக்கோட்டை மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் உள்ள தச்சன்குறிச்சியில் செயல்பட்டு வரும் செம்மண் குவாரியை மூட வலியுறுத்தி தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்களிடம் விவசாயிகள் மனு அளித்தனர். அதன்பின்னர் செம்மண் அள்ள தடை விதிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2 தினங்களாக செம்மண் அள்ளப்பட்டு வருகிறது. இதற்கு அதிகாரிகள் அனுமதி கொடுத்துள்ளனர். இதை கண்டித்தும், செம்மண் குவாரியை மூட வலியுறுத்தியும் நேற்று தச்சன்குறிச்சியில் செயல்பட்டு வரும் செம்மண் குவாரியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது அவர்கள் கூறும்போது, செம்மண் குவாரிகள் அமைக்கப்பட்டுள்ளதால் நீர்தேக்கத்திற்கு தண்ணீர் வராமல் சாகுபடி பாதிக்கப்படுவதாகவும், உடனடியாக குவாரியை மூட வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குவாரியை மூடவில்லை என்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றனர்.