ரத்ததான விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்
ரத்ததான விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி பரிசு வழங்கி பாராட்டினார்.
நெல்லை,
ரத்ததான விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி பரிசு வழங்கி பாராட்டினார்.
ரத்ததான முகாம்உலக குருதி கொடையாளர் தின வாரத்தினை முன்னிட்டு, பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கி மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவ– மாணவிகள் இணைந்து ரத்ததான முகாமை மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரி அரங்கில் நேற்று நடத்தினார்கள்.
இந்த முகாமை கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் ரத்ததான விழிப்புணர்வு தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
மருத்துவக்கல்லூரி மாணவ– மாணவிகள் ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் ரத்ததானம் வழங்கும் இந்த முகாமை நடத்துகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் 2016–ம் ஆண்டில் 120 ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு, 9 ஆயிரத்து 450 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது. இந்த ரத்தம் 16 ஆயிரத்து 800 நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக்கல்லூரி மாணவ–மாணவிகளின் இந்த நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
டாக்டர்கள்இந்த ரத்ததான முகாமில் 300 மாணவ–மாணவிகள் ரத்ததானம் செய்தனர். உலக குருதி கொடையாளர் தினம் வருகிற 14–ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் குருதி கொடையாளர் பதிவு, ரத்த வகை கண்டறியும் முகாம், ரத்ததான முகாம் நடைபெறும்.
முகாமில் டீன் சித்தி அத்திய முனவரா, மருத்துவமனை துணை முதல்வர் டாக்டர் கண்ணன், துணை கண்காணிப்பாளர் டாக்டர் ரவிச்சந்திரன், மருத்துவத்துறை தலைவர் டாக்டர் மோகன் என்ற ஆறுமுகபாண்டியன், ரத்த வங்கி டாக்டர் மணிமாலா, சிறுநீரகத்துறை தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.