தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் மூலஸ்தான பாலாலயம் சிறப்பு பூஜை

தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று மூலஸ்தான பாலாலயம் சிறப்பு பூஜை நடந்தது.;

Update: 2017-06-08 20:30 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று மூலஸ்தான பாலாலயம் சிறப்பு பூஜை நடந்தது.

கும்பாபிஷேகம்

தூத்துக்குடி நகரில் உள்ள முக்கிய கோவில்களில் சங்கரராமேசுவரர் கோவில் ஒன்றாகும். இந்த கோவிலில் உபயதாரர்கள் மூலம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஒரு வருடமாக பணிகள் நடந்து வருகிறது. கோவில் கும்பாபிஷேகம் செப்டம்பர் மாதம் 8–ந் தேதி நடத்தப்படுகிறது. இதனால் திருப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

பாலாலயம்

இதையொட்டி கோவில் மூலஸ்தானத்தில் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக நேற்று பாலாலயம் சிறப்பு பூஜை நடந்தது. நேற்று காலை 7–35 மணிக்கு 2–ம் கால யாக பூஜை, பூர்ணாகுதி நடந்தது. 9 மணிக்கு பாலாலய சிறப்பு பூஜை நடந்தது. சிறப்பு பூஜையை கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் நடத்தினார். தொடர்ந்து மூலஸ்தானத்தில் இருந்த சுவாமி–அம்பாள் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளன. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

மேலும் செய்திகள்