சீதாராம்யெச்சூரியை தாக்க முயற்சி செய்தவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சீதாராம்யெச்சூரியை தாக்க முயற்சி செய்தவர்களை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சீதாராம்யெச்சூரியை தாக்க முயற்சி செய்த ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளையும், அவர்களை பாதுகாக்கும் பா.ஜ.க. அரசையும் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நாகை நகரகுழு சார்பில் நாகை புதிய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் சுபாஷ்சந்திரபோஸ் தலைமை தாங்கினார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த அமிர்தலிங்கம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நாகைமாலி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நகர, ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர குழு உறுப்பினர் பெரியசாமி நன்றி கூறினார்.
தாணிக்கோட்டகம்
இதேபோல சீதாராம்யெச்சூரியை தாக்க முயன்றவர்களை கண்டித்து தாணிக்கோட்டகம் கடைத்தெருவில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழுவை சேர்ந்த கோவை.சுப்பிரமணியன் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.