மெட்ரோ ரெயில் திட்ட பணியால் மாற்று வழிகளில் போக்குவரத்து பெஸ்ட் பஸ்கள் இயக்குவதில் நஷ்டம் அதிகரிப்பு இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை
நாட்டின் நிதிநகரமான மும்பையின் முன்னேற்றத்தில் பொது போக்குவரத்து சேவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நாட்டின் நிதிநகரமான மும்பையின் முன்னேற்றத்தில் பொது போக்குவரத்து சேவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நகர் மற்றும் புறநகர் பகுதிகளை இணைப்பதில் மின்சார ரெயில் சேவையும், மாநகராட்சி பெஸ்ட் பஸ் சேவையும் சிறப்பான பங்களிப்பை தந்து வருகின்றன.
தனியார் போக்குவரத்து சேவையை விட மிகவும் சிக்கனமான மற்றும் திறமையான முறையில் போக்குவரத்து சேவையை அளிப்பதில் இவை முக்கிய பங்காற்றுகின்றன. மத்திய மற்றும் மேற்கு ரெயில்வேக்கள் சார்பில் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவைகளை தினசரி சுமார் 75 லட்சம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள்.
இரண்டாவது இடத்தில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெஸ்ட் குழுமத்தின் சார்பில் இயக்கப்படும் பஸ் சேவைகள் தான் உள்ளது. பெஸ்ட் குழுமம் சார்பில் மும்பை நகரம், புறநகர், நவிமும்பை, தானே, மிரா-பயந்தர் ஆகிய இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பயணிகள் எண்ணிக்கை சரிவு
மும்பையில் உள்ள பெஸ்ட் குழுமத்தின் 27 டெப்போக்களில் இருந்து தினசரி சாதாரண, லிமிடெட், எக்ஸ்பிரஸ், ஏ.சி. பஸ் சேவைகள் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
மின்சார ரெயில் சேவைக்கு அடுத்தபடியாக அதிக பயணிகள் பயன்படுத்தி வரும் பெஸ்ட் பஸ் சேவைகள் தற்போது பல்வேறு காரணங்களால் நஷ்டத்தில் இயங்கி வருகிறது என்பது வேதனைக்கு உரியது. முன்பெல்லாம் தினந்தோறும் சராசரியாக 45 லட்சம் பயணிகள் பெஸ்ட் பஸ்சில் பயணம் செய்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
பெஸ்ட் குழுமம் மும்பையில் மின்சார வினியோகமும் செய்து வருகிறது. கொலபா, கப்பரடே முதல் சயான், மாகிம் வரையிலும் மொத்தம் 10 லட்சத்து 55 ஆயிரம் மின்நுகர்வோர்கள் பெஸ்ட் குழுமம் வினியோகம் செய்யும் மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
பெஸ்ட் குழுமத்திற்கு பஸ் சேவைகளால் ஏற்பட்டு வரும் நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக மின்சார கட்டணத்தில் மிகை வரி(சர்சார்ஜ்) வசூலிக்கப்பட்டு வருகிறது.
மிகைவரிக்கு எதிர்ப்பு
இதன் மூலம் பெஸ்ட் குழுமத்திற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை வருமானமாக கிடைக்கிறது. இவ்வாறு பஸ் சேவை மூலம் பெஸ்ட் குழுமத்திற்கு ஏற்பட்டு வரும் நஷ்டத்தை சரி செய்வதற்கு மின்நுகர்வோர்களிடம் இருந்து மிகைவரி வசூலிப்பதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வருவாய் இழப்பை தவிர்ப்பதற்காக பயணிகள் வரவேற்பு இல்லாத வழித்தடங்களில் பஸ் சேவைகளை ரத்து செய்வது மற்றும் புதிய வழித்தடங்களில் பஸ்களை இயக்குவது போன்ற நடவடிக்கைகளில் பெஸ்ட் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில் பெஸ்ட் பஸ் சேவைகளை இளைய தலைமுறையினர் பயன்படுத்துவதை தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
எனவே இளைஞர்களை கவருவதற்காக அவர்கள் மத்தியில் இருக்கும் ‘செல்பி’ மோகத்தை பயன்படுத்தி பெஸ்ட் குழுமம் ‘செல்பி வித் பெஸ்ட்’ என்ற பரிசுத்திட்டத்தையும் அறிமுகம் செய்தது.
நிராகரிப்பு
இருப்பினும் பெஸ்ட் குழுமம் நஷ்டத்தில் இருந்து மீள முடியாமல் சிக்கித்தவிக்கிறது. இதற்கு குறைந்த பட்ச கட்டணம் ரூ.6-ல் இருந்து ரூ.8-ஆக அதிகரிக்கப்பட்டதே காரணம் என கூறப்பட்டு வந்தது.
அண்மையில் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணத்தை ரூ.12 வரை அதிகரிக்கவும், 200 இடங்களில் இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை இயக்கப்படும் பஸ் சேவையை முடிவுக்கு கொண்டு வரவும் பெஸ்ட் நிர்வாகம் பரிந்துரை செய்து இருந்தது. பெஸ்ட் நிர்வாகத்தின் 2 திட்டங்களையும் பெஸ்ட் கமிட்டி நிராகரித்தது. மேலும் குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை மீண்டும் ரூ.6 ஆக குறைப்பதற்கு பெஸ்ட் நிர்வாகத்தை அறிவுறுத்தியது.
இந்தநிலையில், நகரில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் பெஸ்ட் குழுமத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் இதுவும் ஒன்றாக விளங்கி வருவதாக பெஸ்ட் குழுமம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமம்(எம்.எம்.ஆர்.டி.ஏ.) சார்பில் மெட்ரோ மற்றும் மோனோ ரெயில் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.
இந்த பணிகள் நடைபெறும் இடங்கள் வழியாக பஸ்கள் இயக்க முடியாததன் காரணமாக வேறு மார்க்கங்களில் பஸ்கள் திருப்பி விடப்படுகின்றன. இதனால் பெஸ்ட் பஸ்களுக்கு பயணிகள் வரவேற்பு இருக்கும் இடங்களை சேர்ந்தவர்கள் அதில் பயணிக்க முடியாத நிலை இருந்து வருகிறது.
இது தங்களுக்கு கூடுதல் வருவாய் இழப்பை உண்டாக்கி வருவதாக பெஸ்ட் குழுமம் தெரிவிக்கிறது.
நஷ்டம்
இது குறித்து பெஸ்ட் குழும அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “கடந்த ஆண்டு மே 24-ந் முதல் 30-ந்தேதி வரையிலான 7 நாட்களில் பெஸ்ட் பஸ்களில் 1 கோடியே 80 லட்சம் பேர் பயணம் செய்திருந்தார்கள். இதன் மூலம் ரூ.22 கோடி வருவாய் கிடைத்து இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அதே காலக்கட்டத்தில் ரூ.18 கோடி மட்டும் வருவாயாக கிடைத்து இருக்கிறது.
பயணிகள் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் 10 லட்சம் பேர் குறைந்து, 1 கோடியே 70 லட்சம் பேர் தான் பயணம் செய்திருக்கிறார்கள்.
நாங்கள் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளுக்காக ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். இதன் காரணமாக எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே மாநில அரசு பெஸ்ட் குழுமத்திற்கு நஷ்டஈடு தரவேண்டும்” என்றார்.
பயணிகள் அதிருப்தி
இதுபற்றி பெஸ்ட் சேர்மன் அனில் கோகில் கூறுகையில், இந்த பிரச்சினையை தீவிரப்படுத்துவோம். மாநில அரசு செயல்படுத்தும் திட்டங்களால் பெஸ்ட் குழுமத்திற்கு ஏற்படும் நஷ்டத்திற்கு அவர்கள் இழப்பீடு தந்தே ஆக வேண்டும், என்றார்.
மெட்ரோ ரெயில் வழித்தட பணிகளால் பெஸ்ட் பஸ்களை வேறு வழியாக திருப்பி விடுவதற்கு பயணிகள் மத்தியிலும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.