மெரினாவில் போலீஸ்காரரிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது
மெரினா கடற்கரையில் போலீஸ்காரரிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது.
சென்னை,
சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை போலீஸ் பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் வீர மணிகண்ட பழனி (வயது 26). இவர் நேற்று முன்தினம் இரவு மெரினா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் எதிரே கடற்கரை மணலில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் வீர மணிகண்ட பழனியை தாக்கிவிட்டு அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். அவரை, போலீஸ்காரர் கூச்சல் போட்டபடி பின்னால் விரட்டிச் சென்றார்.
அப்போது எதிரே ரோந்து வாகனத்தில் வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் செல்போனுடன் தப்பிச் சென்ற வாலிபரை மடக்கிப்பிடித்து, மெரினா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், பிடிபட்டவர் திருவல்லிக்கேணி அயோத்தியா நகரை சேர்ந்த சுமேஷ் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் செல்போனை பறிமுதல் செய்தனர்.