கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு உற்சாகத்துடன் வந்த மாணவ-மாணவிகள்

கோடை விடுமுறைக்கு பின் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையொட்டி மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர்.

Update: 2017-06-07 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் நேற்று திறக்கப்பட்டது. இதையொட்டி பள்ளி மாணவ-மாணவிகள் நேற்று முன்தினமே பள்ளி செல்வதற்கான ஆயத்தங்களை செய்திருந்தனர். நேற்று காலை எழுந்ததும் குளித்து சீருடை அணிந்து கடவுளை வணங்கி பெற்றோரிடம் ஆசி வாங்கி பள்ளிகளுக்கு உற்சாகத்துடன் புறப்பட்டு வந்தனர்.

இதையடுத்து பள்ளிகள் நேற்று காலை இறை வணகத்துடன் தொடங்கின. மேலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை சகமாணவிகள் பூ கொடுத்தும், இனிப்புகளை வழங்கியும் வரவேற்றனர். மேலும் தங்கள் நண்பர்களை சந்தித்து ஒருவருக்கொருவர் கைகொடுத்தும், கட்டித்தழுவியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அழுது புரண்ட காட்சி

மேலும் நர்சரி பள்ளிகளில் குழந்தைகளை பள்ளிகளில் விட்டு செல்லுவதற்கு பெற்றோர்கள் மிகவும் சிரமப்பட்டனர். பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை பிரிந்து செல்லவிடாமல் நடுரோட்டில் அழுது புரண்ட காட்சிகளையும் பல்வேறு பள்ளிகளில் காண முடிந்தது. அவர்களை பெற்றோர்கள் சமாதான படித்தி அனுப்பி வைத்தனர். மேலும் விடுதிகளில் தங்கி படிப்பவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் பெட்டி, படுக்கைகளுடன் அவர்கள் வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்