தேன்கனிக்கோட்டையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தேன்கனிக்கோட்டையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2017-06-07 22:30 GMT
தேன்கனிக்கோட்டை,

பெரம்பூர் தனி தாசில்தார் மதன்பிரபு என்பவர் அதிக வேலை பணி காரணமாக அலுவலகத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதற்கு காரணமாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த தனி தாசில்தாரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேன்கனிக்கோட்டை தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் நடராஜ், கிருஷ்ணகிரி வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட இணை செயலாளர் அரவிந்த் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் தேன்கனிக்கோட்டை வட்ட தலைவர் பரிமேலழகர் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்