ஒலேநரசிப்புரா தாலுகாவில் சம்பவம் பெண் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்
ஒலேநரசிப்புரா தாலுகாவில் பெண் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.;
ஹாசன்,
ஒலேநரசிப்புரா தாலுகாவில் பெண் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
வரதட்சணை
ஹாசன் மாவட்டம் கார்லே கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மராய கவுடா. இவரது மகள் சுவேதா(வயது 22). இவருக்கும், ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தாலுகா அங்கரஹள்ளி பகுதியைச் சேர்ந்த வியாபாரியான கிரண் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது கிரண் கேட்ட வரதட்சணையை திம்மராய கவுடா கொடுத்தார்.
திருமணம் முடிந்ததும் கணவனும், மனைவியும் அங்கரஹள்ளி பகுதியிலேயே வசித்து வந்தனர். இந்த நிலையில் கிரண் நிலம் வாங்குவதற்காக, திம்மராய கவுடாவிடம் ரூ.20 ஆயிரம் கேட்டார். அந்த பணத்தையும் திம்மராய கவுடா, கிரணுக்கு கொடுத்தார்.
பிணமாக கிடந்தார்
இந்த நிலையில் மீண்டும் கூடுதல் வரதட்சணை கேட்டு கிரண், சுவேதாவை கொடுமைப்படுத்தி வந்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் கிரண், திம்மராய கவுடாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது சுவேதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த திம்மராய கவுடா உடனடியாக மகளின் வீட்டிற்கு சென்று பார்த்தார்.
அப்போது சுவேதா தூக்கில் பிணமாக தொங்கினார். அவருடைய சாவு மர்மமாக உள்ளது.
போலீசில் புகார்
பின்னர் இதுகுறித்து ஒலேநரசிப்புரா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சுவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே திம்மராய கவுடா ஒலேநரசிப்புராவில் ஒரு புகார் அளித்தார்.
அந்த புகாரில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவளை அவளுடைய கணவனே கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என்றும் கூறியிருந்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.