பள்ளத்தில் தேங்கி இருந்த தண்ணீரில் கார் பாய்ந்தது: விவசாயி உள்பட 4 பேர் மூழ்கி சாவு
பாதாமி அருகே, உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிய போது பள்ளத்தில் கார் பாய்ந்து தேங்கி இருந்த நீரில் மூழ்கி விவசாயி உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
உப்பள்ளி,

உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள....
பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா யண்டிகேரி கிராமத்தை சேர்ந்தவர் யமுனப்பா பசப்பா கடபத்(வயது 45). விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலை தனது உறவினர்களான அசோக் சிவபுத்ரா சாத்தப்பனவர்(40), ருத்ரப்பா வீரபத்ரப்பா குருப்பனவர் (55), சிலகுப்பி ஒலபசப்பா (55), பசலிங்கப்பா கிரகுந்தி ஆகியோருடன் பெலகாவி மாவட்டம் ராம்துர்கா தாலுகா கரகிகுட்டா கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காரில் சென்றார். அங்கு நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று முன்தினம் மாலை காரில் யமுனப்பா பசப்பா கடபத் உள்பட 5 பேரும் யண்டிகேரி நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
காரை பசலிங்கப்பா கிரகுந்தி ஓட்டினார். கார் பாதாமி தாலுகா அன்வால் பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த 10 அடி பள்ளத்தில் தேங்கி இருந்த தண்ணீருக்குள் பாய்ந்தது.
4 பேர் சாவு
இதனால் காருக்குள் இருந்து வெளியே வர முடியாமல் யமுனப்பா, அசோக், ருத்ரப்பா, ஒலபசப்பா ஆகிய 4 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
பசலிங்கப்பா மட்டும் காரின் கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியே வந்து நீரில் மூழ்கி தத்தளித்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பசலிங்கப்பாவை மீட்டு சிகிச்சைக்காக பாதாமி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அறிந்த பாதாமி புறநகர் போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாதாமி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சோகம்
உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிய போது பள்ளத்தில் தேங்கி இருந்த தண்ணீரில் கார் பாய்ந்து விவசாயி உள்பட 4 பேர் இறந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.