பெண் போலீஸ் அதிகாரியுடன் எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பு? கணவரை மீட்டு தருமாறு மகளிர் ஆணையத்தில் மனைவி மனு

பெண் போலீஸ் அதிகாரியுடன் எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பு இருப்பதாக மாநில மகளிர் ஆணையத்தில் மனைவி கொடுத்துள்ளார்.

Update: 2017-06-07 20:13 GMT

பெங்களூரு,

பெண் போலீஸ் அதிகாரியுடன் எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பு இருப்பதாக மாநில மகளிர் ஆணையத்தில் மனைவி கொடுத்துள்ளார்.

மகளிர் ஆணையத்தில் புகார்

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் புறநகர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் திப்பராஜூ. பா.ஜனதாவை சேர்ந்த இவருக்கும், ராய்ச்சூரில் ஒரு போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் பேபி வாலிகார் என்ற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவர் இடையேயும் காதல் மலர்ந்ததாகவும், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திப்பராஜூவின் மனைவி சவுமியா கர்நாடக மாநில மகளிர் ஆணையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் தனது கணவருக்கும், பெண் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பேபி வாலிகாருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் எங்களை சரியாக கவனிப்பது இல்லை என்றும், கணவரை மீட்டு தருமாறும் அதில் கூறி இருக்கிறார்.

திட்டமிட்டே புகார்

இதுகுறித்த செய்திகள் கன்னட தொலைக்காட்சிகளில் நேற்று வெளியானது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சவுமியா, தனது கணவருக்கு எதிராக எந்த மனுவையும் கொடுக்கவில்லை என்றும், தனக்கும், கணவருக்கும் இடையே நல்லுறவு நன்றாகவே உள்ளது என்றும் கூறியுள்ளார். இதுகுறித்த புகாரை மறுத்துள்ள திப்பராஜூ எம்.எல்.ஏ., தனது அரசியல் செல்வாக்கை சீர்குலைக்க இவ்வாறு சிலர் திட்டமிட்டே புகார் கொடுத்துள்ளனர் என்று கூறி இருக்கிறார்.

இந்த வி‌ஷயத்தில் தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தப்போவதாக அவர் கூறினார்.

மேலும் செய்திகள்