லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் பலி
கமுதி அருகே உள்ள ராமசாமிபட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயராம் என்பவருடைய மகன் முருகராஜன்.
கமுதி,
கமுதி அருகே உள்ள ராமசாமிபட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயராம் என்பவருடைய மகன் முருகராஜன்( வயது 19). இதே ஊரைச்சேர்ந்த பரமசிவம் மகன் வடிவேல் முருகன்(19), மற்றும் இவர்களது நண்பர் கீழ்குடி உதயபாண்டி(19) ஆகிய 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் கானா விலக்கில் இருந்து ராமசாமிபட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கமுதி–அருப்புக்கோட்டை சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் முருகராஜன், வடிவேல் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயமடைந்த உதயபாண்டி சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து கமுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்கரபாணி, சப்–இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வம் ஆகியோர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.