குடியாத்தம் கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

குடியாத்தம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

Update: 2017-06-07 20:45 GMT

குடியாத்தம்,

குடியாத்தம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. பார் அசோசியே‌ஷன் தலைவர் தண்டபாணி, அரசு வக்கீல் கே.எம்.பூபதி, மூத்த வக்கீல்கள் கே.மோகன்ராஜ், எஸ்.திம்மரசு, எஸ்.சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சார்பு நீதிபதி கே.தயாநிதி, மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ்.செந்தில்குமார், குற்றவியல் நீதிபதி கே.சந்திரகாசபூபதி ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

இதில் வக்கீல்கள் வி.ரஞ்சித்குமார், என்.குமார், வி.முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்