கார் நிழற்குடை - ஊஞ்சல்!

கார்களை வீட்டில் நிறுத்தும்போது நிம்மதியாக நிழலில் நிறுத்திக் கொள்வோம்.

Update: 2017-06-07 07:13 GMT
 அதுபோல செல்லும் இடங்களில் எல்லாம் நிழற்குடை கிடைக்குமா? மரங்கள் நிற்குமா? என்பது சந்தேகம்தான். இந்தக் குறையைப் போக்குவதற்காக காருடன் இணைந்த நிழற்குடையை உருவாக்கி உள்ளது ‘டிரையல் நெஸ்ட்’ என்ற அமெரிக்க நிறுவனம். இதை காரின் மேற்புறத்தில் பொருட்கள் வைக்கும் இடத்தில் இணைத்துக் கொள்ளலாம். இதன் கம்பிகளை தேவைக்கேற்ப நீட்டி, நன்கு நிழல் விழும் வகையில் வடிவமைக்கலாம்.

சுற்றுலா மையங்களில், இந்த நிழற்குடையை ஒரு ஊஞ்சல்போல பயன்படுத்தி மகிழலாம். தம்பதிகள் மற்றும் குழந்தைகள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் இரட்டை ஊஞ்சலும் விற்பனைக்கு கிடைக்கிறது. 18 கிலோ எடை கொண்ட இந்த நிழற்குடை ஊஞ்சல் 114 கிலோ எடையைத் தாங்கக்கூடியது. ஒற்றை ஊஞ்சல் 469 அமெரிக்க டாலர் விலைக்கும், ஈரடுக்கு ஊஞ்சல் 839 டாலர் விலைக்கும் சந்தைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்