புனேயில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை தூக்கில் பிணமாக தொங்கினார்
புனேயில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்துகொண்டார். அவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.
புனே

மாணவர்
புனே, வாகட் ரஹாட்டணி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் சங்கமேஷ் பிராஜ்தார் (வயது23). இவர் புனேயில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை இவரது பெற்றோர், உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர்.
மாலை அவரையும் திருமணத்திற்கு வரும்படி அழைப்பதற்காக போன் செய்தனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.
தற்கொலை
இதையடுத்து உறவினர் ஒருவர் அவரை அழைத்துக் செல்வதற்காக வீட்டிற்கு வந்தார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. வெகுநேரமாக தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது, அறையில் உள்ள மின்விசிறியில் சங்கமேஷ் பிராஜ்தார் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வாகட் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இருப்பினும் அதற்கான காரணம் தெரியவில்லை. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.