குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
எருமப்பட்டி, மோகனூர் பகுதிகளில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
எருமப்பட்டி,
எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டி ஊராட்சி 7-வது வார்டு போயர் தெருவில் குடிநீர் வினியோகம் சீராக நடைபெறவில்லை என்று அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் இந்த கிராம மக்கள் காலிக்குடங்களுடன் பொட்டிரெட்டிபட்டியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், கமலகண்ணன், மண்டல அலுவலர் திருஞானம், ஊராட்சி செயலாளர் முருகேசன் ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனிடையே இந்த மறியல் காரணமாக, துறையூரில் இருந்து நாமக்கல்லுக்கு செல்லும் பஸ்கள், பொன்னேரி, புதுக்கோட்டை வழியாக நாமக்கல்லுக்கு மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. பின்னர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அந்த பாதையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மோகனூர்
மோகனூர் ஊராட்சி ஒன்றியம் ஒருவந்தூர் ஊராட்சியில் ராசாகோவில் காடு பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் காலிக்குடங்களுடன், நேற்று காலை 8.30 மணியளவில் மோகனூர்-காட்டுப்புத்தூர் சாலையில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயராஜ், ஒருவந்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் கைலாசம், செல்லராசாமணி ஆகியோர் அங்கு விரைந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சமரசம்
அப்போது வருங்காலங்களில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று போலீசார் மற்றும் ஊராட்சி முன்னாள் தலைவர்கள் உறுதி அளித்து சமரசம் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த போராட்டம் காரணமாக மோகனூர்-காட்டுப்புத்தூர் சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.