மாட்டு இறைச்சிக்கு தடை விதித்த மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மாட்டு இறைச்சிக்கு தடைவிதித்த மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2017-06-06 22:45 GMT
திருவாரூர்,

கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்கவும், வாங்கவும் மத்திய அரசு விதித்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மாட்டு இறைச்சிக்கு தடை விதித்த மத்திய அரசை கண்டித்து திருவாரூர் பஸ் நிலையம் அருகில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், தி.க., மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பசு, காளை, எருமை, ஒட்டகம் ஆகிய வற்றின் இறைச்சிக்கு தடை மற்றும் விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்ததை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன், எம்.எல்.ஏ.க்கள் டி.ஆர்.பி.ராஜா (மன்னார்குடி), ஆடலரசன் (திருத்துறைப்பூண்டி), காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் துரைவேலன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நாகராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வடிவழகன், தி.க. மாவட்ட தலைவர் கோபால், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பஜ்லுல்ஹக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்