நாகையில் டி.டி.வி. தினகரனை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாகையில் டி.டி.வி. தினகரனை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Update: 2017-06-06 22:45 GMT
நாகப்பட்டினம்,

அ.தி.மு.க.(அம்மா அணி) துணை பொதுசெயலாளர் டி.டி.வி. தினகரனை கண்டித்து நாகை அவுரித்திடலில் அ.தி.மு.க. (அம்மா) அணியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளவரசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோஷ்டி அரசியல் செய்து ஆட்சியையும், கழகத்தையும் பிரிக்க நினைக்கும் டி.டி.வி.தினகரன் அரசியலை விட்டு விலக வேண்டும் என்றும், டி.டி.வி. தினகரனை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நாகை ஒன்றிய இலக்கிய அணி துணை செயலாளர் சண்முகம், அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்