இறைச்சிக்காக மாடு விற்க தடை விதித்த மத்தியஅரசை கண்டித்து அனைத்துக்கட்சியினர் ஊர்வலம்
இறைச்சிக்காக மாடு விற்க தடை விதித்த மத்தியஅரசை கண்டித்து தஞ்சையில் அனைத்துக்கட்சியினர் ஊர்வலம் நடத்தினர்.
தஞ்சாவூர்,
இறைச்சிக்காக மாடு விற்க தடை விதித்த மத்தியஅரசை கண்டித்து தஞ்சை சிவகங்கை பூங்கா அருகில் இருந்து அனைத்துக்கட்சி சார்பில் நேற்று காலை ஊர்வலம் புறப்பட்டது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் நீலமேகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் திருஞானம், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்து பனகல் கட்டிடம் முன்பு நிறைவடைந்தது. பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், மாநகர தி.மு.க. செயலாளர் நீலமேகம், அவைத் தலைவர் ஆறுமுகம், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் நாஞ்சி.கி.வரதராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி, திராவிடர் கழக மாவட்ட தலைவர் அமர்சிங், பொதுச் செயலாளர் ஜெயராமன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் விடுதலை மாநிலக்குழு உறுப்பினர் கண்ணையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்கள் சாமி.நடராஜன், பாலசுந்தரம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெய்னுலாவுதீன் மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., இந்திய தேசிய மாதர் சம்மேளனம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பேட்டி
முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்தியஅரசு தடை விதித்துள்ளது. இந்த தடை விதிக்கப்பட்டதில் மிகப்பெரிய சதி உள்ளடங்கியுள்ளது. மாட்டு இறைச்சியை உணவாக மக்கள் பயன்படுத்துவதும், தோல் பொருட்களை பயன்படுத்துவதும் காலம், காலமாக இருந்து வருகிறது. உலக அளவில் 20 சதவீத மாட்டு இறைச்சியை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. மாட்டு இறைச்சி மதிப்புமிக்க உணவாக திகழ்கிறது. மாட்டு இறைச்சி, தோல் விற்பனையை கார்ப்பரேட் நிறுவனங்கள் கையில் ஒப்படைப்பதற்காக பெரிய சூழ்ச்சியை மத்தியஅரசு செய்கிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள், இந்துத்துவா அமைப்புகளுக்கு ஆதரவான இந்த செயலை இந்தியா முழுவதும் உள்ள மக்களை ஒருங்கிணைத்து தமிழக மக்கள் முறியடிப்பார்கள். சட்டசபை வருகிற 14-ந் தேதி கூடுகிறது. தமிழகத்தில் மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கமாட்டோம் என சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். முஸ்லிம்களை தனிமைப்படுத்தும் செயலிலும், இந்துத்துவாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செயலிலும் மோடி அரசு ஈடுபடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.