டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்
பெரும்புலிபாக்கம் கிராமத்தில், அடிக்கடி விபத்து ஏற்படுவதால், டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி மகளிர் குழு பெண்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பனப்பாக்கம்,
பனப்பாக்கம், ஓச்சேரி ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த டாஸ்மாக் மதுக்கடைகள் அதிரடியாக மூடப்பட்டன. மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த மதுப்பிரியர்கள் ஓச்சேரியை அடுத்த பெரும்புலிபாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடைக்குச் சென்று தினமும் மதுபானங்களை வாங்கி குடிக்கின்றனர். இதனால் பெரும்புலிபாக்கம் டாஸ்மாக் மதுக்கடையில் தினமும் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதுகிறது. அப்பகுதியில் மாலை மற்றும் இரவில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மாலை நேரத்தில் அவ்வழியாக செல்லும் பெண்கள் டாஸ்மாக் மதுக்கடையை கடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
பெரும்புலிபாக்கம் மதுக்கடைக்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள தாமல், பாலுசெட்டிச்சத்திரம், அம்பி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாலை நேரத்தில் மோட்டார்சைக்கிள்களில் வேகமாக மது வாங்க வருவதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த பொய்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் குழு பெண்களும், பொதுமக்களும் என 300-க்கும் மேற்பட்டோர் நேற்று பகல் 11 மணியளவில் பெரும்புலிபாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டாஸ்மாக் மதுக்கடையின் முன்பு அமர்ந்து மதுக்கடையை இனி திறக்கக்கூடாது எனக் கோரி கோஷங்களை எழுப்பினர்.
பேச்சு வார்த்தை
இது பற்றி தகவல் அறிந்ததும், அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி, அவளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நண்பகல் 12 மணியளவில் டாஸ்மாக் மதுக்கடையை திறக்க வந்த ஊழியர்கள் மதுக்கடையை திறக்க முடியாமல் தொலைவில் இருந்து போராட்டத்தை வேடிக்கை பார்த்தனர். தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதியை பெண்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்விகளை கேட்டனர்.
மதியம் 2 மணியளவில், இன்று (அதாவது நேற்று) ஒருநாள் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்படாது என்று போலீசாரும், வருவாய்த்துறையினரும் கூறி டாஸ்மாக் மதுக்கடை முன்பு அமர்ந்திருந்தவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். அதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு மகளிர் குழு பெண்களும், பொதுமக்களும் கலைந்து சென்றனர். எனினும், டாஸ்மாக் ஊழியர்களும், போலீசாரும் அப்பகுதியில் இருந்தனர். வீட்டுக்கு சென்ற உடன் மீண்டும் டாஸ்மாக் மதுக்கடையை திறந்து விடுவார்கள் என்று கருதி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் மதுக்கடை அருகே நின்றனர்.
போட்டிப்போட்டு மது வாங்கினர்
இந்த நிலையில் மாலை 3 மணியளவில் டாஸ்மாக் கடைக்கு மதுபானங்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. டாஸ்மாக் கடையை திறந்து மதுபானங்களை இறக்கினால் பெண்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று கூறி போலீசார் அந்த லாரியை திருப்பி அனுப்பி விட்டனர். மாலை 4 மணியளவில் அரக்கோணம் டாஸ்மாக் மேலாளர் பால்ராஜி சம்பவ இடத்துக்கு வந்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது அங்கு 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து மாலை 5 மணியளவில் பலத்த போலீஸ் பாதுகாப்போடு அந்த டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. அதுவரை அடிக்கடி வந்து டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டதா? எனப் பார்த்துச் சென்ற மதுப்பிரியர்கள் மாலை 5 மணியளவில் மதுக்கடைக்கு வந்து போட்டிப்போட்டு மதுபானங்களை வாங்கி சென்றனர். டாஸ்மாக் மதுக்கடையை திறக்கவிடாமல் பெண்கள் 5 மணி நேரமாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.