திருவண்ணாமலையில் குறைதீர்வு கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு
திருவண்ணாமலையில் குறைதீர்வு கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.;
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் தாலுகா அளவிலான குறை தீர்வு கூட்டம் தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை சார்பில் தாசில்தார் தலைமையில் நடைபெறும்.
இந்த நிலையில் தாலுகா அளவில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தை வேளாண்மை துறை சார்பில் நடத்த கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கடந்த மாதம் உத்தரவிட்டார்.
அதன்படி இந்த மாதத்திற்கான தாலுகா அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை துறை சார்பில் நேற்று நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் ஹரக்குமார் தலைமை தாங்கினார். இதில் தாசில்தார் ரவி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரமேஷ்குமார், வேளாண் அலுவலர் சந்திரன் முன்னிலை வகித்தனர்.
விவசாயிகள் வெளிநடப்பு
காலை 11 மணி அளவில் கூட்டம் தொடங்கியது. அப்போது விவசாயிகள் திடீரென கருப்பு பேட்ஜ் அணிந்து விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
வெளியே அவர்கள் தாலுகா அளவில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தை கண்டித்தும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தாலுகா அளவிலான குறைதீர்வு கூட்டம் வருவாய்த்துறை சார்பில் இதுவரை நடந்து வந்தது. தற்போது திடீரென வேளாண்மை துறை சார்பில் நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் வருவாய்த்துறை சார்பில் இக்கூட்டம் நடைபெற்றால் அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பார்கள். வேளாண்மை துறை சார்பில் இக்கூட்டம் நடைபெற்றால் எங்களது கோரிக்கைகள் நிறைவேறாது.
எனவே தாலுகா அளவிலான கூட்டத்தை வருவாய்த்துறை சார்பில் நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். மேலும் ஜமாபந்தி நிறைவு விழாவில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் விவசாயிகளுக்கு பேச வாய்ப்பளிக்காததை கண்டித்தும் நாங்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாக்குவாதம்
அப்போது கூட்டரங்கின் உள்ளே அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் விவசாயிகளின் பொதுவான குறைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் தாசில்தாரிடம் தனது கோரிக்கைகள் குறித்து பேசினார். அப்போது வெளியே கோஷமிட்ட விவசாயிகள் திடீரென உள்ளே வந்து அந்த அ.தி.மு.க. நிர்வாகியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நாங்கள் ஒட்டுமொத்தமாக கூட்டத்தை புறக்கணித்து போராடுகிறோம். ஆனால் அ.தி.மு.க. பிரமுகர் தாசில்தாரிடம் கூறும்போது வெளிநடப்பு செய்யும் விவசாயிகள் அனைவரும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள். அதனால் தான் கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக கூறினார். நாங்கள் கட்சி சார்பற்ற விவசாயிகள். அவர் தான் அரசியல் கட்சிரீதியாக கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் என்றனர்.
இரு தரப்பினரின் கருத்து மோதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.