மணல் கடத்தல்; 3 பேர் கைது

காஞ்சீபுரம் சதாவரம் பகுதியில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியதாக 3 பேர் கைது .

Update: 2017-06-06 22:15 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் சதாவரம் பகுதியில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வனுக்கு புகார்கள் வந்தது. அதையொட்டி அவர் போலீசாருடன் அந்த பகுதிக்கு சென்றார். அப்போது 3 மாட்டுவண்டிகளில் மணல் கடத்தியது தெரியவந்தது.  மணல் கடத்தலில் ஈடுபட்ட காஞ்சீபுரம் சதாவரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 37), புண்ணிய கோட்டீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜ் (32), வேகவதி பகுதியை சேர்ந்த ராஜா (30) ஆகியோரை போலீசார் கைது செய்து மாட்டு வண்டிகளை கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்