இந்தியாவில் 60 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் தோல்வியே காணாத ஒரே தலைவர் கருணாநிதி
இந்தியாவில் 60 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் தோல்வியே காணாத ஒரே தலைவர் கருணாநிதி தியாகதுருகத்தில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா பேச்சு
தியாகதுருகம்,
இந்தியாவில் 60 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் தோல்வியே காணாத ஒரே தலைவர் கருணாநிதி மட்டும் தான் என்று தியாகதுருகத்தில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா பேசினார்.
கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்விழுப்புரம் தெற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்–அமைச்சருமான கருணாநிதியின் 94–வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்ற வைர விழா பொதுக்கூட்டம் தியாகதுருகம் சீரணி அரங்கில் நடைபெற்றது. இதற்கு
ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினரும், தியாகதுருகம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான வசந்தம் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தியாகதுருகம் வடக்கு ஒன்றிய செயலாளர் திம்மலை நெடுஞ்செழியன், ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், பெருமாள், அமிர்தவள்ளி கோவிந்தராஜ், நகர செயலாளர் சுப்புராயலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. பிரமுகரும் மவுண்ட்பார்க் பள்ளியின் தாளாளருமான மணிமாறன் வரவேற்றார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துறைசிறப்பு அழைப்பாளராக தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–
இந்தியாவில் 60 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் தோல்வியே காணாத ஒரே தலைவர் கருணாநிதி மட்டும் தான். தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத்தந்தவர் கலைஞர் கருணாநிதி. தமிழகத்தில் ஊனமுற்றோரை அங்கீகாரம் செய்து மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கப்படுவர் என கூறி அவர்களுக்கென தனித்துறையை அமைத்தவர் கருணாநிதி. அவர் தமிழர் நலனுக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்.
தற்போது தமிழகத்தில் செயல்படாத அரசாக எடப்பாடி பழனிசாமி அரசு உள்ளது. மத்திய அரசின் ‘நீட்’ தேர்வினால் தமிழக கிராமப்புற மாணவர்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதைபற்றி அ.தி.மு.க. அரசு கவலைப்படவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி, சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. உதயசூரியன், முன்னாள் மத்திய மந்திரி வேங்கடபதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மூக்கப்பன், திருநாவுக்கரசு, ஒன்றிய துணை செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகள் மலையரசன், எத்திராசு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பெருமாள், நிர்வாகிகள் அமுதா தட்சிணாமூர்த்தி, சாந்தி கணேசன், மணி, தண்டபானி உள்பட விழுப்புரம் தெற்கு மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம் நன்றி கூறினார்.